சிறந்த குறும்படத்தை தயாரித்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் குறும்படபோட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 12 குழுக்கள் தாங்கள் தயாரித்த குறும்படங்களை வெளியிட்டுள்ளனர்.
அதாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி இந்த குறும்படங்கள் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சிறந்த குறும்படங்கள் காவல்துறை ஆய்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார்.