சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூரரை போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு கிடைத்துள்ளது.
68 ஆவது தேசிய விருதுகள் ஜூலை 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவுக்கு கிடைக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு கிடைத்திருக்கின்றது. மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுருளிக்கு சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக கிடைத்திருக்கின்றது.
இதையடுத்து சிறந்த பிஜிஎம்முக்காண விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கும் சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரை போற்று திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. சிறந்த பீச்சர் படமாக சூழரைப்பற்று திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இத்திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 விருதுகள் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் சூர்யாவின் கடின உழைப்பு வீண் போகவில்லை என பாராட்டுகின்றனர். அத்துடன் தேசிய விருது பெற்ற சூர்யாவுக்கு பிரபலங்கள் பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.