Categories
சினிமா தமிழ் சினிமா

சிறந்த நடிகர், நடிகைக்கான விருது….. யார் யாருக்கு கிடைச்சுருக்கு தெரியுமா?….!!!!

சிறந்த நடிகர் நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அது யார் யாருக்கு கிடைத்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ குழு 2020ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ”சூரரைப் போற்று” திரைப்படத்திற்கு 6 பிரிவுகளில் விருதுக்கு தேர்வாகியுள்ளது.குறிப்பாக சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெறுகிறார்.

மேலும் சிறந்த நடிகை விருதை ’க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் பெறுகிறார். ’பாவக்கதைகள்’ படத்திற்காக காளிதாஸ் ஜெயராம் சிறந்த துணை நடிகர் விருதுக்கும் ’ஓ மை கடவுளே படத்திற்காக’ வாணி போஜன் சிறந்த துணை நடிகை விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |