இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்பது குறித்து இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 61% மக்கள் ஆதரவுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீதம் மக்கள் ஆதரவுடன் முதலிடம், அசாம் முதல்வர் ஹிமாத் பிஸ்வாஸ் ஷர்மா 62% மக்கள் ஆதரவுடன் இரண்டாவது இடமும் பிடித்துள்ளனர்.
இதனைப் போலவே லோக்சபா தேர்தல் இப்போது நடந்தால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் மோடிக்கும் ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள முதல்வருடன் ஒப்பிடுகையில் முதல்வர் ஸ்டாலின் மூன்றாம் இடம் பிடித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.