சிறப்பாக பராமரிக்கப்படும் பள்ளிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழை வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் ஐ.எஸ்.ஓ தர சான்று வழங்க பள்ளிகளில் இயங்கும் சத்துணவு மையங்களில் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இதில் சிறப்பாக பராமரிக்கப்படும் பள்ளிகளுக்கு சத்துணவு மையம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்களை கலெக்டர் சமீரன் வழங்கினார்.
மேலும் பணியின்போது இறந்த ஒத்தக்கால்மண்டபம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சமையலர் விசாலாட்சி என்பவரது மகள் ஜோதிமணிக்கு சமையல் உதவியாளர் பணி நியமன ஆணையை வழங்கினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) கே.ஆர்.ஸ்ரீதர், உதவி கணக்கு அதிகாரி சந்திர பிரியா, துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாசாணம், செவந்தம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.