வாலிபரை நண்பர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் விக்னேஷ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிட்கோ தொழில்பேட்டை அருகே திறந்தவெளியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விக்னேஷின் நண்பரான தர்மராஜ்(21) என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது இந்திய கிரிக்கெட் வீரர்களின் சிறந்தவர் யார் என்பது தொடர்பாக விக்னேஷுக்கும் தர்மராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து கைகலப்பாக மாறியதால் கோபமடைந்த தர்மராஜ் மதுபோதையில் விக்னேஷின் தலையில் கிரிக்கெட் மட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். பின்னர் அச்சத்தில் தர்மராஜ் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து தர்மராஜன் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.