இந்த வருட சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான “பாலோன் தி ஓர்” என்ற விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகில் மிகச் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் “பாலோன் தி ஓர்” கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை 64 ஆண்டுகளாக இந்த விருதை வழங்கும் “பிரான்ஸ் புட்பால்” குழுமம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கால்பந்து வீரருக்கு ஊக்கமளிக்கும் வகையில் கேப்ரியல் ஆனோட் இந்த விருதை அறிமுகம் செய்தார்.
முதலில் ஐரோப்பிய கால்பந்து வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த விருது தற்போது உலகம் முழுவதும் விளையாடும் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஏற்றவகையில் விதிமுறைகளை மாற்றியமைக்கப்பட்டன. இதுவரை அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 6 முறையும், போர்ச்சுக்களின் கிறிஸ்டியானா ரொனால்டோ 5 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் இந்த விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.