Categories
மாநில செய்திகள்

சிறப்பாக செயல்படும் நியாய விலை கடைகளுக்கு பரிசு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ரேஷன் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்க தக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 நிலைகளிலும் மாவட்ட அளவில் 2 நிலைகளிலும் பரிசுகள் வழங்கப்படும்.

அவ்வகையில் தகுதியானவர்களை தேர்வு செய்து விபரங்கள் அனுப்ப சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் பணியாளர்கள் மாநில அளவிலான போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவர்.

Categories

Tech |