Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள்… பாராட்டு சான்றிதல் வழங்கும் விழா… கலந்துகொண்ட டி.ஜி.பி…!!

பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அலுவலகத்தில் பாராட்டு சான்றிதல் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கொலை, கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆன்லைன் மோசடி போன்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஆன்லைன் மோசடி வழக்கில் டெல்லி வரை சென்று குற்றவாளிகளை பிடித்த போடி நகர் காவல்துறை இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அவரது குழுவினருக்கும், தேவதானப்பட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த பெரியகுளம் துணை சூப்பிரண்டு அதிகாரிகள் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையினர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் உத்தமபாளையத்தில் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவான குற்றவாளியை கண்டுபிடித்த சப்-இன்ஸ்பெக்டர் திவான் மைதீன் மற்றும் கம்பம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்த கம்பம் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் சரக போலீஸ் டிஜிபி விஜயகுமார் கலந்துகொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி ஊக்குவித்துள்ளார். அப்போது மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |