Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெறும் திருவிழா…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் அப்பகுதிகளில் சிலர் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்றுக்கொண்டிருந்த பாஸ்கரன் என்பவரை அழைத்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் பாஸ்கரன் வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பாஸ்கரனை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |