சேலம் மாவட்டத்தில் வெள்ளாண்டிவலக தூய செல்வநாயகி ஆலயம் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் வெள்ளாண்டிவலசு தூய செல்வநாயகி ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த ஒரு வாரமாக சிறப்பு திருப்பலி நடைபெற்றுள்ளது. அங்கு நடைபெற்ற திருப்பலியில் பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து செபஸ்தியர், அருளப்பர், உலக மீட்பர், தூய செல்வநாயகி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றுள்ளது. இந்த வீதி உலாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடி சென்றுள்ளனர். திருவிழாவின் முடிவில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.