Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை கடைபிடித்த மாணவர்கள்… பலத்த பாதுகாப்பில் செய்முறை தேர்வு…. நேரில் ஆய்வு செய்த கல்வி அலுவலர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து பள்ளிகளில் செய்முறை தேர்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகிற மே மாதம்  5 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. இதனால் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரையும் சமூக இடைவெளியில் வரிசையாக நிற்க வைத்து அனைவரையும் முககவசம் அணிந்துள்ளனரா என்று ஆசிரியர் ஆய்வு செய்துள்ளனர்.

இதனையடுத்து கிருமி நாசினி வழங்கப்பட்டு மேலும் தெர்பல் ஸ்கேனர் மூலம் உடல்நிலை  வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் வரிசையாக தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்கு நிறைவடைந்தது. இந்த செய்முறை தேர்வினை முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |