Categories
சினிமா தமிழ் சினிமா

சிறப்பாக நடைபெற்ற தளபதி 66 பூஜை…. விஜய்க்கு சுத்திப்போடும் ராஷ்மிகா மந்தனா…. சமூக வலைத்தளங்களில் வைரல்….!!!!

தளபதி விஜயின் நடிக்கும் விஜய் 66 படத்தின் பூஜை சிறப்பாக தொடங்கப்பட்டது.

பிரபல நடிகர் விஜய் நடித்துள்ள நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனையடுத்து விஜய் நடிக்க உள்ள தளபதி 66 படத்தின் பூஜை நடைபெற்றது. இந்தப் படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் விஜய், ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தற்போது ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு சுத்தி போடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |