Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு வழியா நேர்த்திக்கடன் செலுத்தியாச்சு…. 108 பாலாபிஷேகத்தில் அம்மன்… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…!!

சேலம் மாவட்டத்தில் சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சின்னம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவில் வளாகத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில் அம்மனுக்கு 108 பாலாபிஷேகம் செய்து, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பக்தர்கள் பூங்கரகம் எடுத்து, அலகு குத்தி ஊர்வலமாக அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |