புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் விற்கப்படும் நுங்குகளை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் உடல் சூட்டை தனிப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் வெப்ப சலனத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியிலுள்ள ஏனாதி, அம்மன்குறிச்சி, ஆலவயல் ஆகிய பகுதியில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்த மரத்தில் தற்போது நுங்கு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அறுவடை செய்த நுங்குகளை சாலையோரம் மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். வெயில் சூட்டை தனிப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் நுங்குகளை வாங்கி செல்கின்றனர்.