45 வேட்பாளர்கள் வார்டு கவுன்சிலராக நேற்று பதவி ஏற்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளது. இதில் சுயேச்சை-3, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சி-1, தமிழக வாழ்வுரிமைக் கட்சி-3, விடுதலை சிறுத்தை கட்சி-3, அ.தி.மு.க-6, தி.மு.க-27 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வைத்து ஆணையாளர் விசுவநாதன் பதவி பிரமாணம் செய்துவைத்துள்ளார். இந்த விழாவில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவிருக்கிறது.