நகராட்சி தலைவர் போட்டியில் முதன் முதலில் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் கடந்த பிப் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் விழுப்புரம் நகராட்சியில் 45 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுயேட்சை-3, மனிதநேய மக்கள் கட்சி-1, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, பா.ம க மற்றும் காங்கிரஸ்-2, அ.தி.மு.க-7, தி.மு.க-25 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்பு விழா நடந்து முடிந்த நிலையில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியின்றி தி.மு.க கவுன்சிலர் தமிழ்ச்செல்வி பிரபு நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் விழுப்புரம் நகராட்சியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை தமிழ்செல்வி பிரபுவையே சேரும். இதனையடுத்து நடைபெற்ற துணைத்தலைவர் போட்டியில் தி.மு.க கவுன்சிலர் சித்திக் அலி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு எம்.எல்.ஏக்கள் புகழேந்தி மற்றும் டாக்டர் லட்சுமணன், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.