சிறப்பாக நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் காளைகளுடன் வந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக வசந்த் விஜய் எம்.பி கலந்து கொண்டார். இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வசந்த் விஜய் எம்.பி சிறப்பு பரிசுகளை வழங்கினார்.