Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“108 புனித தீர்த்த குடங்களுடன்”… சிறப்பு அலங்காரத்தில் சாமி…. கோலாகலமாக நடைபெற்ற மண்டல பூஜை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையிலுள்ள முருகன் கோவிலில் மண்டல் பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மலைமேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும் தினமும் காலை, மாலை இரு வேளையும் மலைமேல் உள்ள முருகனுக்கு சிறப்பு பொருட்களால் மண்டல அபிஷேகம் நடை பெற்றுள்ளது. இந்நிலையில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு பெற்ற  பின் 108 புனித தீர்த்த குடங்களுடன் முதல் கால யாக சாலை பூஜையு தொடங்கியுள்ளது.

இதனையடுத்து இரண்டாம் கால யாக பூஜை வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அபிஷேகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றுச் சென்றுள்ளனர்.

Categories

Tech |