Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொள்கை திருவிழா…. ஆவேச அலங்காரத்தில் அம்மன்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மன் அக்னி குளத்தில் இருந்து  புறப்பட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்துள்ளார். அதன்பிறகு சிறப்பான மயான கொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இதைதொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், திரவியம், மஞ்சள் போன்ற பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பின் அம்மனுக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு 16 கரங்கள் கொண்ட ஆவேச காளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதன்பிறகு மேளதாளங்கள் முழங்க அம்மன் சிம்ம வாகனத்தில் வைக்கப்பட்டு கோவிலை சுற்றி உலா வந்துள்ளார். அதன்பிறகு கோவில் பூசாரிகள் பிரம்ம கபாலத்தை எடுத்துக்கொண்டு  மயானத்திற்கு சென்றுள்ளனர். அந்த மயானத்தில் அம்மன் ஆவேச அலங்காரத்தில் காட்சியளித்துள்ளார். அதன்பின் கொண்டைக்கடலை, நாணயங்கள், காய்கறிகள், பழங்கள். கொழுக்கட்டை போன்ற பொருள்களால் அம்மனுக்கு படையல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் அம்மன் போல் வேடம் அணிந்து கோழிகளை கடித்துள்ளனர். அதன்பின் அம்மன் வேடமணிந்தவர்கள் பக்தர்களின் மேல் ஏறி சென்று நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை சிறப்பு தரிசனம் செய்துள்ளனர். மேலும் இந்த திருவிழா மார்ச் 7-ஆம் தேதி வரை நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |