மாசிமகத்தை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்துள்ளனர். கோவில் சுக்கிரவார வழிபாட்டு குழு தலைமையில் 1008 பால்குடம் கைலாசநாதர் கோவிலில் இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் எடுத்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால்குடங்களை வைத்து அபிஷேகம் செய்துள்ளனர். அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை கட்டப்பட்டுள்ள்ளது. இதைத்தொடர்ந்து விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அணிவித்தல் மற்றும் உற்சவ அம்மனை ஊஞ்சலில் வைத்து விடையாற்றி விழாவும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.