மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் சருகுவலயப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கால்வாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மீன்களை பிடித்துள்ளனர். இவர்கள் மீன்பிடி வலை, கூடை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துள்ளனர்.
இதில் வீராமீன், கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு விதமான மீன்கள் கிடைத்துள்ளன. இந்த மீன்களை மக்கள் கடவுளுக்கு படைத்து அதன் பின் சமைத்து சாப்பிடுவார்கள். அவ்வாறு செய்தால் தண்ணீர் பெருகி விவசாயம் செழிக்கும் என்பது இந்த மக்களின் நம்பிக்கையாக உள்ளது.