சிறப்பாக நடைபெற்ற வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 13-ம் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பல்லக்கு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அம்மன் பல்லக்கில் வைத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தார். அதன்பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.