Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம்…. சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜை…. திரளான பக்தர்கள் பங்கேற்பு…!!

சேலம் மாவட்டத்தில் கோட்டை பெருமாள் கோவிலில் ராமநவமி பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கோட்டை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ராமநவமி விழாவையொட்டி மூலவர் பெருமாளுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் ராமர், சீதை மற்றும் லட்சமணன் மேலும் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக முகக் கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |