Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்….. பரிசுகள் வழங்கிய அமைச்சர்….!!!

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகள் முடிவடைந்ததும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். அவர் கடையாலுமூடு பகுதியில் சமீரா என்ற மாற்றுத்திறனாளி மாணவி வெளிநாடு செல்வதற்கு பல பிரச்சனைகள்  இருந்தது.

இந்த பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பிறகு சிலம்பக்கலை குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைக்க வேண்டும். இதுதொடர்பாக நான் முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளேன். இதற்கு முதல்வரும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்த்து துணிந்து வாழ வேண்டும் எனக் கூறினார். இதைத்தொடர்ந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 36 பேருக்கு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

Categories

Tech |