Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்ச்சி…. திரளானோர் பங்களிப்பு….!!

சிறப்பாக நடைபெற்ற சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கான மாரத்தான், மணல் சிற்ப போட்டி, சைக்கிள் போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார். இவர் மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறினார். மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறை அனைத்து மாணவ-மாணவிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்  கூறினார்.

Categories

Tech |