Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ராமர் சீதா கருவறையுடன்…. 25 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்கள்…. சிறப்பாக வடிவமைத்த மாதிரி மரச்சிற்பம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ராமர் சீதா கருவறையுடன் மரச்சிற்பத்தை மரச்சிறபக் கலைஞர்களால் பிரமாண்டமாக  வடிவமைத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் 160 அடி உயரத்தில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற மரச்சிற்பக்கலைஞர்கள் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட மரச் சிற்பகலைஞர்கள் உதவியுடன் கடந்த 6 மாதமாக இரவு பகலாக தேக்கு மரத்தில் 34 துண்டுகளுடன் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி மரச்சிற்பம் தயார் செய்துள்ளனர்.

ராமர், சீதா கருவறையுடன் அழகுற வடிவமைக்கப்பட்டமரச்சிற்பத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் மரச்சிற்பம் அயோத்தி ராமர் கோவிலுக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த மரச்சிற்பத்திற்கு வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி ராமருக்கு உகந்த விசேஷம் தினமான ராம நவமியன்று ராம பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை வழிபாடு செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் இந்த ராமர் சீதா மரச்சிற்பம் வைக்கப்பட உள்ளது.

Categories

Tech |