Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்… அந்த பகுதியில் இதான் ஸ்பெஷல்.. ஜோராக நடைப்பெற்ற விற்பனை…!!

சேலம் மாவட்டத்தில் புளியம்பழம் விற்பனை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான திம்பம், நிலக்காடு, பெரியகுளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அந்த கிராமத்தில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றது. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் புளியம் பழங்களை பறித்து கூடையில் வைத்து, பூலாம்பட்டியிலுள்ள மலையடிவாரத்தில்  வைத்து விற்பனை செய்து வருவார்கள். இந்த விற்பனை வருடம் தோறும் கோடை காலங்களில் செய்யப்படும்.

இந்நிலையில் புளியம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பூலாம்பட்டியில் 50 க்கும் மேற்பட்டோர் புள்ளிகளை கூடையில் வைத்து விற்பனை செய்து வருகின்றார்கள். இதில் ஒரு கூடை  ரூபாய் 1000 முதல் 1200 வரை விற்பனை செய்யப்படும். இதனையடுத்து பாலமலை புளி மிகவும் சுவையுடன் இருக்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார்கள்.

Categories

Tech |