Categories
மாநில செய்திகள்

“சிறப்பான மக்கள் பணி வாழ்க திராவிட மாடல்”….. சீமான் ட்வீட்….!!!!

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இலவச டிக்கெட்டுகளை வாங்கி கொடுப்பதோடு, படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணியும் கொடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்.. படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!” என்று தெரிவித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இதை திரைப்படம் மே 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இந்தியில் வெளியான ஆர்டிக்கிள் 15 என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |