Categories
மாவட்ட செய்திகள்

சிறப்பு ஆய்வாளரை திருப்பி அடித்த வாலிபர்….. வாணியம்பாடியில் பரபரப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பஜார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளார். ஆனால் அவர் நிற்காமல் சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரது வாகனத்தைத் துரத்திச் சென்று சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி பிடித்துள்ளார்.

அதன்பிறகு போலீசாருக்கும் வாகன ஓட்டிக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சிறப்பு ஆய்வாளர் உமாபதி மணிகண்டனை கண்ணத்தில் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் உமாபதியை திருப்பி அடித்துள்ளார் . இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கிடையில் மணிகண்டனை வாகனத்துடன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைப் போலவே போலீஸ் ஒருவர் இளைஞரை தாக்கியது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |