சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழநிலை, காரேந்தல்ப்பட்டி, திருக்களாப்பட்டி ஆகிய பகுதிகளில் பட்டா கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது. இதில் டாஸ்மார்க் துணை ஆட்சியர் வேலுசாமி, மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் வள்ளிமயில், ஊராட்சி மன்ற செயலாளர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரி, வார்டு உறுப்பினர் ஆறுமுகம், சிவசங்கரி, அழகம்மாள், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து பெயர் திருத்தம், உட்பிரிவு மாற்றம், விவசாய நிலம் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 34 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 4 மனுக்களுக்கு முகாமில் தீர்வு காணப்பட்டது. மேலும் மீதமுள்ள மனுக்கள் மீது வருவாய்த்துறையினர் நேரடியாக விசாரணை செய்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.