பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விசாரணை நிறைவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து உள்ளார். இந்நிலையில் சிறப்பு டிஜிபி மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் தினந்தோறும் விசாரித்த டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விசாரணை நிறைவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கு விசாரணையை டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் முடிக்காவிடில் மாவட்ட நீதிபதி கூடுதல் அவகாசம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.