Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறப்பு பூஜை செய்வதாக கூறிய சாமியார்…. படத்தை பார்த்து “ஷாக்”கான இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே இருக்கும் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு உறவினர் மூலம் சின்னதுரை என்பவர் அறிமுகமானார். சின்னதுரை தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டார். அப்போது குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர என்ன செய்ய வேண்டும் என விவசாயி சின்னதுரையிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் உங்களின் மனைவியின் இருக்க ஆபத்து இருக்கிறது எனவும், செய்வினையை எடுக்க வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என சின்னதுரை தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி விவசாயியின் குடும்பத்தினர் சின்னதுரையை வீட்டிற்கு வரவழைத்தனர். பின்னர் விவசாயி பூஜை பொருட்களை வாங்குவதற்காக சின்னதுரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென சின்னதுரை அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது “திருடனான என்னை போலீசில் பிடித்து கொடுக்க பார்க்கிறாயா?” என கூறியதோடு, விவசாயியின் மூத்த மகளான 26 வயதிலும் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படத்தை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து விவசாயி அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சின்னதுரையை பிடித்து விசாரித்த போது அவர் போலியான சாமியார் என்பது தெரியவந்தது. அவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஆபாச படம் அனுப்பி மிரட்டியதாக அவர் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |