Categories
மாநில செய்திகள்

சிறப்பு பேருந்திற்கான முன்பதிவிற்கு…. இதை செய்யுங்கள்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிற ஊர்களில் இருந்து வர ஏதுவாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை சென்னை, கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில்  இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு www.tnstc.in, tnstc official app  ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்யலாம்.

 

Categories

Tech |