Categories
தேசிய செய்திகள்

சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு….. உடனே முந்துங்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை,நாகர்கோவில் மற்றும் கேரளாவுக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில்களுக்கு இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது. அதன்படி தாம்பரம் – நெல்லை மற்றும் நாகர்கோவில் இடையே ஜனவரி 12, 13, 16 ஆகிய தேதிகளில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எர்ணாகுளத்துக்கு ஜனவரி 12, கொச்சுவேலிக்கு ஜனவரி 17ஆம் தேதியும் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |