தென்மாவட்டங்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன்பின் கொரோனா தொற்று பரவல் நாளடைவில் வெகுவாக குறைந்தது தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொது பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியது. தெற்கு ரயில்வே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்குவது அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேப்போல் ரயில் எண்: 06006 நாகர்கோவில் ஜங்ஷன் – தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி புறப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 4.10 மணிக்கு சென்று அடையும். இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை ஜங்ஷன், திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் ஒரு 2 அடுக்கு ஏசி, 2 மூன்றடுக்கு ஏசி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மற்றும் லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இடம் பெற உள்ளன. இவ்வாறு தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ரயில் பயணங்கள் கூறிய போது தமிழகத்தில் பண்டிகை காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நேரங்களில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்வது வழக்கம். பெரும்பாலும் மக்கள் பொது போக்குவரத்தை விட ரயில் பயணத்தில் தான் விரும்புவார்கள். அதனால்பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற இந்த நேரங்களில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சிறப்பாக இருக்கும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். அந்த வகையில் தற்போது நல்ல செய்தி வெளியாகி இருப்பதால் தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு காகத்தான் இதுவரை காத்திருந்தோம் என ரயில் பயணிகள் கூறியுள்ளனர். தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியீட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.