தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேளாங்கண்ணி -கோவா சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வாஸ்கோடாகாமா – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 07353) வரும் ஆகஸ்ட் 28, 30, மற்றும் செப்டம்பர் 6, 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. இதைப்போல் வேளாங்கண்ணி -வாஸ்கோடாகாமா வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 07354) வரும் 24, 3@மற்றும் செப்டம்பர் 7, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.