கிருஷ்ணகிரியில் சிறப்பு வகுப்பிற்காக பள்ளிக்கு வந்த மாணவர்கள் தேனீக்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நேற்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. தமிழக முழுவதும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று மாத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்துள்ளது.
அப்போது மாலையில் மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளி அருகே மரத்தில் இருந்த மலை தேனீக்கள் பலத்த காற்று காரணமாக வெளியேறி, மாணவர்களை கொட்டியுள்ளது.இதனால் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.