Categories
மாநில செய்திகள்

சிறார்களுக்கு 83,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி…. புதுச்சேரிக்கு வருகை….!!!!

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 13 முதல் 15-18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போடப்பட உள்ளநிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடம் ஒதுக்க வேண்டும். பள்ளிகளில் தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைந்து ஆசிரியர் ஒருவரை தலைமை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 2007& அதற்கு முன் பிறந்த மாணவர்களின் விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சிறுவர்களுக்கு செலுத்துவதற்காக 83,000 கோவாக்சின் தடுப்பூசிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |