இந்தியாவில் சமீபகாலமாக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் கொடூரமான முறையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இதில் ஒரு சிலர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல் அதை, படமாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச படங்களை இணையத்தில் பதவி ஏற்றுவது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் 83 பேர் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இதில் தமிழகத்தில் சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.