Categories
தேசிய செய்திகள்

சிறார் மீதான வழக்கு…. “காவல்துறை முன்மாதிரியாக இருக்க வேண்டும்”…. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து….!!!!!!

குழந்தைகள் பாதுகாப்பிற்கான தமிழக அரசின் செயல் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் பி கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சமூக நலத்துறை மற்றும் யூனிசெப் சார்பில் புதன்கிழமை சிறார் சட்டங்கள் பற்றி காவல்துறையினருக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்று கொண்டு அவர் பேசிய போது, சமூக மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அதிக எண்ணிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றது. மேலும் இந்த வழக்குகளில் விரைந்து விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. சிறார் தொடர்புடைய வழக்குகளில் காவல்துறையினர் அதிக அக்கறையுடன் கையாள வேண்டி இருக்கிறது. பல நிகழ்வுகளில் குற்றம் என்பதை தெரியாமலும் தவறான புகார்களாலும் சிறார்கள் பாதிப்பு ஆளாகி விடுகின்றார்கள். இதனால் அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. அதனால் சிறார் வழக்குகள் விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியமாக இருக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய அங்கன்வாடி பணியாளர்கள் முதல் சமூக நல அலுவலர்கள் வரையிலான அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கு மாநில அளவிலான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 27 கோடியில் அமைக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பில் தாய் தந்தையரை இழந்த 13 ஆயிரத்து 670 குழந்தைகளுக்கு 418.53 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த குழந்தைகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களுக்கும் பின்பற்றுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழக அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான கொள்கை கடந்த வருடத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றிய செயல் திட்ட அறிக்கை தமிழக முதல்வர் விரைவில் வெளியிட இருக்கிறார் என கூறியுள்ளார். மேலும் சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி தமிழ்நாடு மாநில நீதித்துறை ஆகாதமி இயக்குனர் டி லிங்கேஸ்வரன், யுனிசெப் பிரதிநிதி குமரேஸ்வரன் போன்றோர் பேசியுள்ளனர்.

மதுரை மாநகர் திருச்சி பெரம்பலூர் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் காவல்துறை முன்மாதிரியாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறார் சட்டம் பற்றி காவல்துறையினுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து அவர் பேசியபோது சிறார் சட்ட விதிகளை காவல்துறையினர் முழுமையாக புரிந்து வைத்திருக்க வேண்டும். குற்றம் சம்பவங்கள் தொடர்பாக சிலர் மீது புகார் பெறப்படும் சூழலில் அது உண்மை தன்மையை தீர்க்கமாக உறுதி செய்த பிறகு வழக்கு பதிவு செய்ய வேண்டும் பிற வழக்குகளை காட்டிலும் சிறார்கள் மீதான வழக்குகளில் காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மேலும் இந்த விஷயத்தில் காவல் துறையானது முன்மாதிரியான துறையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |