சொத்தில் பங்கு தராததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் மனவளர்ச்சி குறைந்த மாரீஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரனான ஜீவானந்தத்திடம் குடும்ப சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்நிலையில் ஜீவானந்தம் சிறிது நாட்கள் கழித்து சொத்தில் பங்கு கொடுப்பதாக மாரீஸ்வரியிடம் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாரீஸ்வரி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மாரீஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ஜீவானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.