Categories
தேசிய செய்திகள்

சிறிய தொகையை பெரிய முதலீடாக மாற்ற…. இதுதான் ஈஸியான வழி…!!!

இந்த காலத்து இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயின் மதிப்பே தெரிவதில்லை. முன்பெல்லாம் ஒரு ரூபாய், 50 காசுகளை கூட உண்டியலில் சேர்த்து வைத்து அதனை வைத்தே ஒரு பெரிய தொகையை சேர்த்து தேவையான பொருட்களை வாங்கியுள்ளோம். ஆனால் தற்போது சில்லரை காசுகளின் மதிப்போ அல்லது சேமிப்பின் மதிப்போ யாருக்கும் தெரிவதே இல்லை. இன்றைய சூழலில் நாம் காசை கையிலே எடுப்பதில்லை. கார்டில் ஸ்வைப் செய்துவிடுகிறோம். எனினும் ஜார் செயலி மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய தொகையை மிச்சப்படுத்தலாம்.

வெறும் 1 ரூபாயில் தொடங்கி ஒரு சிறிய தொகையை டிஜிட்டல் தங்கத்தில் கூட நாம் முதலீடு செய்யலாம். அதனை எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் உங்களுடைய டிஜிட்டல் தங்கத்தை விற்று பணத்தை உங்கள் Paytm அல்லது Google Pay கணக்குகளுக்கு அனுப்பிவிடலாம்.
ஜார் செயலி டிஜிட்டல் உண்டியல் ஆகும்.

இது எங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை எஸ்எம்எஸ் வழியாகப் கைப்பற்றி உதிரி சில்லரையை எடுத்து டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்கிறது. தேசிய கொடுப்பனவு கழகத்தின் (என்.பி.சி.ஐ) உதவியுடன், ஜார் செயலி நம் நாட்டில் முதல் முறையாக உண்டியல் சேமிப்பு திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. எனவே இந்த செயலியைப் பயன்படுத்தி தினசரி பணத்தை சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள்.

Categories

Tech |