Categories
சினிமா

“சிறிய மினுமினுக்கும் உடையில் யாஷிகா ஆனந்த்”…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது இணையத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டுஇருக்கிறார்.

தமிழ் சினிமா உலகில் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் படத்தின் மூலம் பிரபலமானதைவிட தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்  2வில் கலந்து கொண்டதன் மூலமாகவே இவருக்கு ரசிகர்கள் அதிகமாக ஆரம்பித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பெங்களூருக்கு சென்று திரும்பி வரும் பொழுது விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடக்கக்கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது குணமாகி கொண்டு வருகிறார். யாஷிகா ஆனந்த் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். தற்போது இவர் சிறிய மினுமினுக்கும் ஆடை ஒன்று அணிந்தவாறு போட்டோ ஷூட் செய்த புகைப்படத்தை வெளியிட்டுயிருக்கிறார்.

Categories

Tech |