Categories
மாநில செய்திகள்

சிறு,குறு நிறுவனங்களுக்கு சலுகை அறிவிப்பு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் புதிய தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக தொடங்கிய சிறு, குறு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும் போது வைப்பு தொகை வைக்கத் தேவையில்லை. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனத்துக்கு முன் அனுபவம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |