சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து விளக்கும் பிரசாரம் நடைபெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி ஒன்றிய கிராமம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிறுதானியங்களின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில் பிரசாரம் நடைபெற்றது. இதனை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் இதில் வேளாண்மை துறை இயக்குனர் ரோகினி, தொழில்நுட்ப வேலாண்மை முகமை தலைவர் சின்ன கண்ணன், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, வார்டு உறுப்பினர் கார்த்திகேயன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.