Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க….. கிளம்பிய 6 விழிப்புணர்வு வாகனங்கள்…. ஆட்சியரின் அசத்தல் நடவடிக்கை.!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச் சத்து மிக்க சிறு தானியங்களை விவசாயிகள் அதிகப்படியான சாகுபடி செய்வதற்காக விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

கோவை மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 6 விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. மேலும் அந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது , நெல் , கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம், கம்பு, ராகி, குதிரைவாலி, வரகு ஆகிய  சிறு தானியங்கள் அதிகமாக பயிரிடபடுகிறது .  2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்து சிறுதானியங்களின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக  பல்வேறு தொழில்நுட்பங்களை பரிந்துரைசெய்கிறோம் .

மேலும்  விவசாயத்தின் முதுகெலும்பாக சிறுதானிய சாகுபடி மானாவாரி இருக்கின்றது என்றும் கோவை மாவட்டத்தில், இறவை மற்றும் மானாவாரியாக சோளம் பயிரிடப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுதானிய பயிரின் பரப்பை அதிகரிப்பதற்காக விதைகள், உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் மானிய விலையில் கிடைக்கிறது.  கைத்தெளிப்பான், பயிர் பாதுகாப்பு மற்றும் களைக்கொல்லி மருந்துகளுக்கு  பின்னேற்பு மானியம்வழங்கப்படுகிறது.  விதைகளை  உற்பத்தி செய்கின்ற  விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக கிலோவுக்கு 30 ரூபாய்.வழங்கப்படுகிறது .

 

தொடர்ந்து பேசிய அவர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர், மதுக்கரை, சர்க்கார் சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், அன்னூர் ஆகிய இடங்களில் சிறுதானியங்களின்  சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தப்பாட்ட  கலைஞர்களை  6 பிரசார வாகனங்களில் அனுப்பி  விவசாயிகளிடம் விழிப்புணர்வுசெய்யப்படும்  என்று தெரிவித்துள்ளார் .

Categories

Tech |