சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தனிப்படை மற்றும் கூண்டுகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள ஈஞ்சமலை உள்ள வனப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடு,ஆடு போன்றவற்றை சிறுத்தை புலி அடித்துக் கொன்றுவிடுவதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி சிறுத்தை புலியின் காலடி தடத்தை உறுதி செய்துள்ளனர். மேலும் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அப்பகுதியில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சிறுத்தை புலியையை பிடிப்பதற்காக வனப்பகுதியில் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.