சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் புதுமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது . மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதுதவிர இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் சூர்யா இணைய இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்தை சிவா இயக்கி வருவதால் சூர்யாவே அந்தப் படத்தை டிராப் செய்ததாக தகவல் வெளியானது. தற்போது சிவா, சூர்யா இருவரும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தளபதி 65 பட நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.