ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர் .
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனவிலங்குகள் அவ்வப்போது சாலையைக் கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தாளவாடியிலிருந்து நெய் தாளபுரம் நோக்கி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சிக்ல்லி வனப்பகுதியில் சாலையோரம் உள்ள புதரில் சிறுத்தை ஒன்று மறைந்து நின்று உள்ளது. வாகன ஓட்டிகளை கண்டதும் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்து வனத்துறையினர் தாளவாடி பகுதியில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது சாலையைக் கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.